26 உயிர்களை பலியெடுத்த கோர விபத்து!

Saturday, July 2nd, 2016

பேருந்தின் டயர் வெடித்ததில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் நெடுஞ்சாலை வழியாக சென்ற பேருந்தின் டயர் வெடித்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள டியான்ஜிங் மற்றும் சிசியான் நகரங்களுக்கு இடையில் நேற்று பயணித்து கொண்டிருந்த வேளையிலே பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 30 பயணிகளுடன் அதிக வேகமாக வந்த அந்த பேருந்தின் டயர் திடீரென்று வெடித்துள்ளது.

இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து படோய் என்ற இடத்தின் அருகே வீதியோர தடுப்பின்மீது மோதி  தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 


மெகி புயலுக்கு சீனாவில் 16 பேர் பலி!
யெமன் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் - ஐ.நா அதிகாரிகள் நம்பிக்கை!
பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது எச்.எம்.எஸ் குயின் எலிசபெத் விமானந்தாங்கிக் கப்பல்!
வைத்தியசாலையில் ஒக்சிஜன் பற்றாக்குறை : 70 குழந்தைகள்  துடிதுடித்து பலி!
மூடப்பட்டுள்ள அமெரிக்க அரசு அலுவலகங்களை திறக்க  அமெரிக்க சட்ட நிபுணர்கள் முயற்சி!