22 விமான நிலையங்கள் மீது தாக்குதல் திட்டம்? -இந்திய முழுவதும் பதற்ற நிலை!!

Friday, October 7th, 2016

 

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு தீவிரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் 4 மாநிலங்களில் 22 விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் உரியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இரு நாடுகளிடையும் பதற்ற நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், சுமார் 100 தீவிரவாதிகள் குளிர்காலத்திற்கு முன் இந்தியாவிற்குள் நுழைய உள்ளனர்.

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் குஜராத், ஆகிய மாநிலங்கள், மற்றும் டில்லியில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் என 22 விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்.

மேலும், பண்டிகை காலம் நெருங்கி வருவதால், விமான நிலைய பாதுகாப்புடை, மாநில தலைமை காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்புபடை, விமான நிலைய பாதுகாப்புபடை உள்ளிட்ட படைப்பிரினவருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதில் விமானநிலையங்களில் பயணிகள் கொண்டுவரப்படும் பொருட்கள் உடைமைகள், தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கவும், விமான நிலைய வாளகங்களில் வரும் வாகனங்களை தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும் எனவும் சந்தேகத்தின் பேரில் நிற்கும் வாகனங்களை உடனடியாக சோதித்து அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 201608170619503791_MHA-orders-security-audit-CISF-cover-for-over-all-airports_SECVPF

Related posts: