200 கிலோ எடை கொண்ட அரிய கடல் ஆமையை கொன்றவர்கள் மீது விசாரணை!

Sunday, December 11th, 2016

200 கிலோ எடை கொண்ட அரிய கடல் ஆமை ஒன்றை கொன்ற குற்றச்சாட்டில் தெற்கு சீனாவில் ஆறு பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

சீனாவில் சமூக வலைத்தளங்களில் பரவலாக சென்ற காணொளியில், குவாங்டூங் மாகாணத்தில் லெதர்பேக் எனப்படும் அருகிவரும் கடல் ஆமை ஒன்று துண்டுகளாக வெட்டப்பட்டு பின் சாலையோரங்களில் மீனவர்களால் விற்கப்படுவது போன்று தோன்றுகிறது.

அந்த கடல் ஆமை கண்டுபிடிக்கப்பட்ட போது ஏற்கனவே இறந்துவிட்டதாக சந்தேக நபர்கள் கூறிவருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் மத்திய அதிகாரிகள் தொடர்ந்து அரிய வகை உயிரினங்களை பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளனர்.ஆனால், நாட்டின் விலங்கு பாதுகாப்பு சட்டங்களை அடிக்கடி செயல்படுத்த உள்ளூர் அதிகாரிகள் தவறிவிடுகின்றனர்.

_92916022_gettyimages-760790

Related posts: