200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 16 பேர் பலி!

14 Monday, July 17th, 2017

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் வாகனம் இன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த விபத்தில் மேலும் 29 பேர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில், ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து  பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது

சமூக ஊடகமான ட்விட்டரில், விபத்து குறித்த தகவலை இந்திய மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.பள்ளத்தாக்கான மலைப்பாதை வழியாக பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 46 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தை கடந்து அமர்நாத் ஆலயத்தை சென்றடைய வேண்டும்.62-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 28-ம் திகதி தொடங்கியது.  இந்த யாத்திரை 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று ஓகஸ்ட் மாதம் 7-ம் திகதி ரக் ஷா பந்தன் தினத்தன்று நிறைவடையும்.பல்டல் மற்றும் பாஹல்காம் முகாம்களில் இருந்து மலைப்பாதை வழியாக தினந்தோறும் குழுக்களாக செல்லும் யாத்ரீகர்கள் அமர்நாத் ஆலயத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.இந்நிலையில், யாத்ரீகர்களில் சிலர் ஒரு வாகனத்தில் இன்று ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். .ரம்பான் மாவட்ட எல்லைக்குட்பட்ட சாலையில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் உள்ள பெரிய பள்ளத்துக்குள் உருண்டு கவிழ்ந்தது.இந்த விபத்தில் 16 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.29 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது


பங்களதேஷில் மின்னல் தாக்கத்தில் 65 பேர் பலி
அதிபர் தேர்தலில் 22 ஆண்டுகளாக ஆட்சி செய்த யாக்யா ஜமே தோல்வி - மக்கள் கொண்டாட்டம்!
ஐநா அமைதிப்படையின் புதிய தலைவராக ஜீன் பியர் லாக்ரோயிஸ் நியமனர்!
இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவை முந்தும் - உலக வங்கி!
விக்கிலீக்ஸ் நிறுவுனரை வெளியேற அனுமதிக்குமாறு பிரித்தானியாவிடம் ஈக்குவடோர் கோரிக்கை
30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…