20 ஆண்டுகளின் பின் இந்தியப் பிரமுகர் வடகொரியாவில்!

Friday, May 18th, 2018

இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி.கேசிங், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடகொரியா சென்றுள்ளார்.

இதன்போது அவர் வட கொரியாவின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பிராந்திய அரசியல் சூழல், பொருளாதாரம், கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடியுள்ளார்.

வடகொரியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அணு ஆயுத உறவு குறித்து வி.கே.சிங் இதன்போது கவலையை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த 1998 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவுக்கும் வடகொரியாக்கும் இடையில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பாக இது கருதப்படுகின்றது. 20 ஆண்டுகளின் பின்னர் இந்திய அரசாங்கத்தின் பிரமுகர் ஒருவர் வடகொரியா சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: