20 ஆண்டின் பின் ரஷ்யாவின் இராணுவ செலவினம் வீழ்ச்சி!

Friday, May 4th, 2018

2017 ஆம் ஆண்டு ரஷ்யாவின் இராணுவ செலவினம் கடந்த இருபது ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது முதன்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஸ்வீடனின் அமைதி நிறுவனமொன்றுதெரிவித்துள்ளது.

உலக நாடுகள் இராணுவத்துக்கு எவ்வளவு செலவு செய்கின்றன என்பது குறித்த அதன் ஆண்டு மதிப்பீட்டில் 2017ஆம் ஆண்டு ரஷ்யா 66 பில்லியன் டொலர்கள் செலவு செய்ததாகவும்  இது 20சதவீத வீழ்ச்சி எனவும் ஸ்டாக்ஹாம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனா இராணுவத்துக்கு செலவு செய்யும் தொகையானது சுமார் 12 பில்லியன் டொலர்கள் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

பாரிய இராணுவ வலிமை கொண்டுள்ள அமெரிக்காவின் இராணுவச் செலவு நிலையாக உள்ளதாகவும், அந்நாட்டிற்கு அடுத்த ஏழு இடங்களில் உள்ள நாடுகளின் இராணுவ செலவின் கூட்டுத்தொகைக்கு அமெரிக்காவின் செலவு தொகை சமமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Related posts: