14ஆம் திகதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ அறிவிப்பு!
Friday, July 7th, 2023இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது.
இதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு சந்திராயன் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை உறுதி செய்தது.
இதையடுத்து, நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன் 2 விண்கலம் ஏவும் திட்டத்தை தொடங்கியது.
நவீன கருவிகளுடன் உருவான சந்திராயன் 2 விண்கலம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. செப்டம்பர் மாதம் இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விண்கலம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.
அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, சந்திராயன் 3 விண்கலம் ஏவும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும், விரைவில் சந்திராயன் ஏவும் திகதி அறிவிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எதிர்வரும் 14ஆம் திகதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|