130 இற்கும் அதிகமானோர் படுகொலை – மாலியில் கொடூரம்!

Monday, March 25th, 2019

மாலி நாட்டில் Mopti மாநிலத்தின் Ogossagou பகுதிக்குள் நுழைந்த குழுவினரால் அப்பகுதியை சேர்ந்த 130 இற்கும் அதிகமான ப்ளானி என்ற சிறுபான்மையினத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சிறுபான்மையினத்தினர் ஜீஹாட் போராளிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவித்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த குழுவினர் பாரம்பரிய போர் ஆடையில் ஆயுதங்களுடன் குறித்த கிராமத்தினுள் நுழைந்து கிராமம் முழுவதையும் சுற்றிவளைத்த பின்னர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஆயுதம் தாங்கிய Dogon என்ற பாரம்பரிய வேட்டைக்காரர்களினால் இந்த கொடூரத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலியில் இடம்பெறும் வன்முறை பற்றி விவாதிக்க ஐ.நா தூதுவர்கள் மாலியில் இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் துப்பாக்கிகள் மற்றும் அகலமான கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அங்கிருந்த குடிசைகள் மற்றும் அந்த கிராமம் எரிக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts: