13 பேருடன் மாயமானது இந்திய இராணுவ வானூர்தி!

Tuesday, June 4th, 2019

இந்திய இராணுவத்தின் An-32 சரக்கு வானூர்தி ஒன்று சீன எல்லைப்பகுதியாகிய அருணாச்சலப் பிரதேசத்தில் காணாமல்போயுள்ளதால் இந்திய இராணுவ வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்தபோதே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணி அளவில் புறப்பட்ட வானூர்தி இறுதியாக பிற்பகல் 1 மணிக்கு அது போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

8 அதிகாரிகளும் 5 பயணிகளும் இருந்ததாக கூறப்படும் வானூர்தியை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: