125 கோடி மக்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்..!!

நாட்டில் உள்ள 125 கோடிக்கும் மேற்பட்ட மக்களில், வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என்று திட்ட கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் நடைபெற்ற ‘ரொக்கம் இல்லாத பரிமாற்றம்’ குறித்த பயிலரங்கில் அவர் இதை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
‘ரொக்கம் இல்லா பரிமாற்றத்துக்கு நாடு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உயர்த்தும் நோக்கத்தில்தான், ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், 26 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, 20 கோடிக்கும் மேற்பட்ட ரூபே கார்டுகள் வழங்கப்பட்டன. ஆயினும், 95 சதவீதம் பேர் இன்னும் ரொக்க வரவு-செலவுகளில்தான் ஈடுபட்டு வருகின்றனர். இது, இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல’ என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|