10,000 கனடியர்கள் அடிப்படை வருமானம் கோரி மனு!
Wednesday, February 8th, 2017உத்தரவாதமான வருமானம் ஒன்றை பெரும்பாலான கனடியர்கள் விரும்புகின்றனர் என தெரியவந்துள்ளது. உத்தரவாதம் மிக்க வருமானம் ஒன்றிற்கு ஆதரவாக 10,000ற்கும் மேற்பட்ட கனடியர்கள் மனு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த 10,000 இலக்கு டிசம்பர் மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மனு ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான கனடா அடிப்படை வருமானத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு சகல குடிமக்களிற்கும் அரச உதவிக்கு பதிலாக அனைவருக்கும் பொருந்தும் ஒரு வருமானத்திற்காக வாதிடுகின்றதென கூறப்படுகின்றது.
தற்சமயம் இரண்டு இடங்களில் பைலட் திட்டங்கள் வழியில் உள்ளன. ஒன்று பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட். ஒன்று ஒன்ராறியோ. ஒன்ராறியோவின் திட்டம் எதிர் வரும் வசந்த காலத்தில் சிலசமயம் வெளியிடப்படலாம். இத்திட்டத்தில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு தனிநபரும் மாதமொன்றிற்கு குறைந்தது 1,320 டொலர்களும், உடல் இயலாமை கொண்டவர்கள் ஒவ்வொருவரும் மேலதிக 500 டொலர்களையும் பெறுவர்.
இத்திட்டம் மூன்று இடங்களில் பரீட்சார்த்திக்க பட்டது. ஒன்று தெற்கு ஒன்ராறியோ. ஒன்று ஒன்ராறியோ வடக்கு மற்றும் ஒன்று முதற் குடி சமூகம். டிசம்பரில் பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட் அடிப்படை வருமான திட்டத்தை பின்பற்றுவதாக ஒரே மனதாக -மாகாணத்தில் வறுமையை குறைப்பது அல்லது போக்கும் நம்பிக்கையுடன் அரசாங்கத்தை பின்பற்றுவதாக வாக்களித்துள்ளது.
Related posts:
|
|