முன்னாள் கால்பந்து வீரர் டேசர் துப்பாக்கியால் சுடப்பட்டு  மரணம்!

Tuesday, August 16th, 2016

ஆங்கிலேய  பிரீமியர் லீக்கின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டாலியன் அட்கின்சன் போலிசாரால் உயர் மின்னழுத்த டேசர் ஸ்டன் துப்பாக்கியால் சுடப்பட்டபின் உயிரிழந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தனிநபர் பாதுகாப்பு மீதுள்ள அக்கறை காரணமாக ஒரு சம்பவத்தில் நடவடிக்கை எடுத்ததாக மிட்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள டெல்ஃபோர்ட் நகரப் போலிசார் தெரிவித்துள்ளனர். டேசர் துப்பாக்கி ஒன்று பயன்படுத்தப்பட்டதாக போலிசார் கூறியுள்ளனர்.

அந்த 48 வயதான நபர் அட்கின்சன் என அடையாளம் காணப்பட்டதாகவும், மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். 1980, 90களில் அட்கின்சன் பல சிறந்த கால்பந்து அணிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்டன் வில்லா மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகளும் இதில் அடங்கும்

Related posts: