பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார்

Monday, March 7th, 2016

தென்னிந்திய திரைப்பட நடிகர் கலாபவன் மணி கொச்சியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து  காலமானார்.

மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்

இவருக்கு நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக அவதிபட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று திடீரென்று சிகிச்சை பலனின்றி இன்று மாலை கலாபவன் மணி உயிர் பிரிந்தது.

கமல் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தில் போலீசாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் தேசிய விருது, கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார்

Related posts: