நட்புறவு அணை திறப்பு!

Sunday, June 5th, 2016

ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட அணையை ஆப்கன் அதிபரும், இந்திய பிரதமரும்ஆரம்பித்து வைத்தனர்.

ஹேரத் மாகாணத்தில் இருக்கும் இந்த ஆப்கன்-இந்திய நட்புறவு அணை, 750 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பிற்கு பாசன வசதி வழங்கவும், 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் உதவும்.

பத்தாண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த இந்த கட்டுமானப் பணியின்போது, பொறியாளர்கள், தொழிலாளர்கள், மற்றும் காவலாளிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் பல தடைகளைச் சந்திக்க நேர்ந்தது.

குழப்பங்களையும் அழிவுகளையும் பரப்புவோருக்கு மாறாக, கட்டியெழுப்பவும், வளரவும் இரு நாடுகளும் முடிவெடுத்ததாக அதிபர் அஷ்ரப் கனி குறிப்பிட்டுள்ளார்.

160604034116_afghan_india_friendship_dam_640x360_afp_nocredit

160604105622__afghan-india_friendship_dam_in_herat_afghanistan_640x360_epa_nocredit

Related posts: