ஸ்காட்லாந்தில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு!

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து 600 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ள லோரன்ஸோ என்ற புயல் அடுத்த வாரம் கரையைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தற்போதே அங்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
வேய் என்ற ஆற்றில் வெள்ளத்தின் அளவு அபாய அளவைத் தாண்டி ஓடுவதால் அதன் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக லண்டனில் நடக்கவிருந்த உலக சாம்பியன்ஷிப் சைக்கிள் போட்டிகளுக்கான வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது
Related posts:
|
|