வெள்ளை மாளிகை விதித்துள்ள தடை!
Sunday, September 29th, 2019அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டுத் தலைவர்கள் சிலருடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளின் பிரதிகளை அணுகுவதை வெள்ளை மாளிகை தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வேதச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோருடன் ட்ரம்ப் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளின் குறிப்புகள் வழமையான முறையில் கையாளப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பீடன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள யுக்ரேன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கியை, டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுதாக ஜனநாயக கட்சியினர் விவாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும், குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் தொடர் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|