வடகொரியா சைபர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு..!

Tuesday, October 8th, 2019


வடகொரியா தமது அணுவாயுத திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சைபர் தாக்குதல்களை பயன்படுத்தி பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா தமது அணுவாயுத திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு 35க்கும் மேற்பட்ட இணையவழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று வடகொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாகவும் இந்த மாதத்தில் மாத்திரம் 4 முறை ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த ஏவுகணை பரிசோதனையானது ஐக்கிய அமெரிக்கா மற்றும் தென்கொரிய இணைந்து முன்னெடுக்கவுள்ள கூட்டு இராணுவ பயிற்சிக்கான எச்சரிக்கையாகும் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்திய தொலைக்காட்சிகளை ஒளிபரப்பினால் நடவடிக்கை: பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை!
இலங்கை அணியினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் மரணம்!
அணு ஆயுத போர் ஆரம்பமாகலாம்  வட கொரியா எச்சரிக்கை!
குற்றவியல் சட்டத்தினை நவீன மயப்படுத்த வேண்டும் - கியூபெக்கின் நீதி அமைச்சர்!
வீட்டின் மீது விமானம் மோதி கோர விபத்து – 5 பேர் பலி!