வங்காளதேசத்தில் தொடரும் வெறிச்செயல்: புத்த மத துறவி வெட்டிக்கொலை

Sunday, May 15th, 2016

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள வங்காளதேசத்தில் சமீப காலமாக மதசார்பற்ற ஆர்வலர்கள், சிறுபான்மையின தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வங்காளதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள புத்தமடம் ஒன்றின் தலைமை துறவியாக இருந்து வந்த மாவாங்  ஷூ வே (வயது 70) என்பவர் மடத்திற்குள்ளேயே நான்கு பேரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மடத்திற்குள் தனியாக துறவி இருந்த போது, கொலையாளிகள் அவரை கொலை செய்து இருக்ககூடும் என்று உள்ளூர் போலீசார்  தெரிவித்தனர். நேற்று நள்ளிரவு இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் எனவும் போலீசர் தெரிவித்தனர். இவரது படுகொலைக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும் கொலை நடத்தப்பட்ட விதம் இதற்கு முந்தைய சம்பவங்களை ஒத்திருப்பதால் இது இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைவரிசையாகவே இருக்கும் என்று போலீஸ் தரப்பில் நம்பப்படுகிறது.

இந்த மடம் கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் தனியாக ஒரு இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மடத்தில், புத்த துறவி தனியாக வசித்து வந்துள்ளார். இதனால், நள்ளிரவு கொலை செய்யப்பட்ட போதிலும், காலைஉணவு வழங்க சீடர்கள் சென்ற போதே , துறவி கொலையுண்டு கிடப்பதை  கண்டறிந்துளனர்.

Related posts: