மேலும் இரண்டு ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!

Saturday, August 10th, 2019

வடகொரியா மேலும் இரண்டு அடையாளம் தெரியாத ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த செயற்பாடு அண்மைய வாரங்களில் இடம்பெற்ற 5ஆவது ஏவுகணை பரிசோதனையாகும்.

தென் ஹம்ங்யொங் மாகாணத்தின் கிழக்கு நகரமான ஹம்ஹங்கில் வைத்து ஜப்பான் கடற்பரப்பை நோக்கி இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னிடமிருந்து தான் மிகவும் சிறந்த ஒரு கடிதத்தை பெற்றுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது.அமெரிக்க மற்றும் தென்கொரிய கூட்டு இராணுவ பயிற்சி தொடர்பில் கிம் ஜோன் அன், மகிழ்ச்சியற்றிருந்தார் என்றும் ட்ரப்ம் தெரிவித்துள்ளார்

Related posts: