மத்திய கிழக்கு தொடர்பில் அமெரிக்கா கவலை!

Wednesday, September 4th, 2019


லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய படையினரும், ஹெஸ்புல்லா பயங்கரவாதிகளும மோதிக்கொண்டமை தொடர்பாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியைக் குழப்பும் நடவடிக்கையாக இது அமைந்திருப்பதாக அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இஸ்ரேல் தற்காப்புக்காக நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்பதை அமெரிக்கா மதிக்கிறது.

எனவே ஹெஸ்புல்லா பயங்கரவாதிகள் லெபனான் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கில் அமைதியை குழப்புகின்ற ஈரானின் நடவடிக்கைகளை ஒத்ததாக, ஹெஸ்புல்லாவின் நடவடிக்கையும் அமைந்திருப்பதாக ராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: