போட்டியிலிருந்து திடீரென விலகிய கமலா ஹாரிஸ்!

Thursday, December 5th, 2019


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் எம்.பி. விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவதாக இந்திய கமலா ஹாரிஸ் இவ்வாண்டின் தொடக்கத்தில் அறிவித்தார். அதற்காக நிதி திரட்டலிலும் பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். ஜூலை மாத இறுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக கமலா ஹாரிஸ் திடீரென அறிவித்துள்ளார்.

நான் கோடீஸ்வரி அல்ல. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமையால் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளேன்’ என கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts: