பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பு!

Friday, October 25th, 2019


நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 12 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த இணங்கினால், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை விவாதிப்பதற்கான காலத்தை நீடிக்க உள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான திட்டத்திற்கு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிவரை கால அவகாசம் குறிப்பிடப்பட்டிருந்து. எனினும், பிரிக்ஸிட் திட்டத்தை பிரித்தானிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுப்பதற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பிரெக்ஸிட் தொடர்பில் ஒரு ஒப்பந்தமும் இல்லாத நிலையில், தேர்தலை ஆதரிக்க மாட்டேன் என்று ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

Related posts: