பிரான்ஸில் கத்தி குத்து தாக்குதல் -ஒருவர் பலி!

Sunday, September 1st, 2019


பிரான்ஸில் இடம்பெற்ற கத்தி குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ், Villeurbanne, ரயில் நிலையத்தில் முன்னால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

திடீரென இரண்டு மர்ம நபர்கள் பலரை நோக்கி கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்ற சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் இடம்பெற்றதென இதுவரையில் தகவல் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: