தேர்தல் வன்முறை: ஆப்கானிஸ்தானில் 32 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் 32 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலவிய வன்முறைகள் காரணமாக 2 முறை அந்த நாட்டு ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த தேர்தல் மீண்டும் நடைபெற்றது.
இந்த தேர்தலின் போது நாடு முழுவதும் 132 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல்களில் 32 பேர் பலியானதுடன், 123 பேர் காயம் அடைந்ததாகவும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 132 தாக்குதல்களில் 64 தாக்குதல்களுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் இந்தியாவிடம் அமெரிக்க உறுதி!
பிரித்தானியாவில் தீவிரவாதத்தை வளர்க்கும் முக்கிய நாடு சவுதி?
தற்கொலை தாக்குதல்: நைஜீரியாவில் 60 க்கும் மேற்பட்டோர் பலி!
|
|