துப்பாக்கி சூட்டு: அவுஸ்திரேலியாவில் 4 பேர் பலி!
Wednesday, June 5th, 2019வடக்கு அவுஸ்திரேலியாவின் டர்வின் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் காயமடைந்த ஒருவர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில், குறித்த துப்பாக்கி சூட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதலை அடுத்து, 45 வயதுடைய சந்தேக நபரொருவர் அவுஸ்திரேலிய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த துப்பாக்கி சூட்டின் பின்னணியில் எந்த வித பயங்கவராத குழுவின் செயற்பாடும் இல்லை என காவற்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில், கைதானவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Related posts:
மெக்சிகோவில் வாகன விபத்து - 21 பேர் உயிரிழப்பு!
குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து!
பறந்து கொண்டிருந்த கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறப்பு: பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியானது...
|
|