ஜம்மு காஷ்மீரில் தேர்தல்!

Friday, October 25th, 2019


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து அங்குள்ள பதற்றம் தணியாத நிலையில், இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகின்றது.

பல்வேறு கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவலுக்கு மத்தியில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான பஞ்சாயத்து தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அந்தவகையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 316 பஞ்சாயத்துகளில், 310 பஞ்சாயத்துளில் தேர்தல் நடத்தப்படுகிறது.

Related posts: