சீனாவை நோக்கி நகரும் லெக்கிமா !

Saturday, August 10th, 2019

சீனாவை நோக்கி சக்தி வாய்ந்த லெக்கிமா சூறாவளி நகர்கிறது. கிழக்கு கடற்பரப்பின் ஊடாக இந்த சூறாவளி நகர்கின்ற நிலையில், சீனாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சூறாவளி மணிக்கு 190 கிலோமீற்றர் என்ற வேகத்தில் வீசுகிறது. நாளையதினம் இது சீனாவின் செஜியாங் மாகாணத்தில் கரைதொடும்.

தற்போது அவரச உதவிகள் குழுக்;கள் அந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related posts: