குறைந்த கட்டணத்தில் அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவை!

Saturday, August 24th, 2019


உக்ரைன் நாட்டின் ஸ்கைப் அப் எயார் லைன்ஸ் விமான சேவையை குறைந்த கட்டண விமான சேவையாக ஆரம்பிக்க உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் உக்ரைனின் தலைநகரில் இருந்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவைகளை இவ்வறு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உக்ரைனின் தலைநகரான கெய்விலிருந்து வழக்கமான விமானசேவைகளுக்கு அமைவாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா சேவைகளுக்கு ஸ்கை அப் ஏர்லைன்ஸ் தனது கட்டணத்தை குறைத்துள்ளது.

இதுதொடர்பான விண்ணப்பம் ஒன்றை ஸ்கை அப் ஏர்லைன்ஸ் உக்ரைன் மாநில விமான நிர்வாகத்திடம் சம்ர்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.

மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஸ்கை அப் எயார்லைன்ஸ் நிறுவனம் அனுமதியினை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: