கலிபோர்னியா மாநிலத்திற்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை!

Thursday, October 31st, 2019


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்குப் பிராந்தியத்திற்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் காலநிலை சேவைகள் நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த எச்சரிக்கையானது லொஸ் ஏஞ்சல்ஸ், வென்டூரா, சான் பேர்னாண்டினோ ஆகிய பிரதேசங்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளளன.

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 128 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அது தீ பரவுவதை விரைவுபடுத்தும் எனக் கருதப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: