கடும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு!

Monday, October 7th, 2019


பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னா உள்பட 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் புன்புன் மற்றும் கங்கை ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது என பேரிடர் மீட்புப்படையினர் கூறினர்.

Related posts: