கடும் பனிப்பொழிவு – பாகிஸ்தானில் 14 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 14th, 2020


பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளதுடன், பனிப்பொழிவு காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குவெட்டா நகரில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related posts: