ஐ.நாவிடம் உதவி கோரும் சவுதி அரேபியா!

Tuesday, September 17th, 2019

சவுதி அரேபியாவின் இரண்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல்கள் தொடர்பில் பூரணமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரேபிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரியுள்ளது.

ஐ.நா உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு சவுதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய தாக்குதல்களுக்கு ஹவுத்தி போராளிகள் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: