ஈரானை கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த தாக்குதல் மற்றும் மே மாதத்தில் நடந்த நான்கு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றுக்கும் ஈரான் மீது குற்றம் சுமத்தியது அமெரிக்கா. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
குறிப்பாக சௌதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீது நடந்த தாக்குதலும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிவந்தது. இந்நிலையில்தான் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
ஈரான் மீது உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உலக நாடுகளின் நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் பார்க்கக்கூடும். எண்ணெய் வழங்கலில் பிரச்சனை ஏற்படும். இதனால் நமது வாழ்க்கையில் இதுவரை பார்த்திராத வகையில், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவில் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும்.
மத்திய கிழக்கு பிராந்தியம்தான் உலகின் ஆற்றல் தேவைகளில் 30% பூர்த்தி செய்கிறது, உலகத்தின் 20% வர்த்தகம் இங்கே நடைபெறுகிறது. உலகின் 4% ஜிடிபியில் பங்கு வகிக்கிறது. ஆகவே இவற்றில் சிக்கல் ஏற்பட்டால் உலக பொருளாதாரமே சிதைந்துவிடும்.
இது சவுதி அரேபியா அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமான பிரச்சனை அல்லடுடு என்றும் இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
Related posts:
|
|