இந்தியாவின் புதிய குடியுரிமை : ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை விதிப்பு!

Friday, December 20th, 2019

இந்தியாவின் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சில மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இந்திய தலைநகர் புதுடெல்லி, உத்தர பிரதேஷ், மற்றும் கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளிலும் பெங்களுர் நகரிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பகுதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தவர்களில் நூற்றுகணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை இந்திய உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: