அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகின்றார் ஹரி!

Tuesday, January 14th, 2020


பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவுக்கு பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் தங்களின் எதிர்கால வாழ்க்கையை தனியே கட்டமைத்துக் கொள்ளவும் ராணி அனுமதி வழங்கியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை அமைத்துக் கொள்ளவும், அடுத்த சில நாட்களில் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் எனவும் அரண்மனை தகவல் தெரிவிக்கின்றன.

அரண்மனை கடமைகளை விட்டு விலகுவதற்கான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் முடிவில் ராணி தமது ஆழ்ந்த ஏமாற்றத்தையும் பதிவு செய்துள்ளார்.

ராணி மற்றும் இளவரசர்கள் சார்லஸ், வில்லியம், ஹரி ஆகியோருக்கு இடையில் சாண்ட்ரிங்ஹாமில் நடந்த முக்கிய கலந்துரையாடலுக்கு பிறகு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த கூட்டத்தில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் கனடாவிலிருந்து கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவது தொடர்பாக இளவரசர் ஹரியும், அவருடைய மனைவியும் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஹரியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: