அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான் !

அமெரிக்கா தம்மீதான போலியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்வைக்குமானால் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானே காரணம் என அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்து ஈரான் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஆளிலில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது.இதனையடுத்து குறித்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.
எனினும் அந்த பயங்கரவாத தாக்குதலை ஈரானே மேற்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டினார். எவ்வாறாயினும் அந்த குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்தும் மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|