அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மேன்முறையீடு ..!

Thursday, October 10th, 2019


அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவுக்கு உதவி வழங்கிய பாகிஸ்தான் மருத்துவர் தனது சிறைத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

ஷாகில் அப்ரிடி  என்ற குறித்த மருத்துவரின் வழக்கு விசாரணைகள் பகிரங்க நீதிமன்றில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், வழக்கரிஞர்களின் வேண்டுகோளின்பேரில் நீதிபதி அந்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.ஒரு நியாயமான விசாரணை மறுக்கப்பட்டதாக அவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க படைகளினால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: