அமெரிக்காவின் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரி விலக்கு!

Friday, September 13th, 2019


அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது.

வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்று நோய்க்கான மருந்து போன்ற 16 வகையான பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது.

இந்த வரிவிலக்கானது 17ம் திகதி அமுலுக்கு வரும் என்றும், ஒரு ஆண்டுக்கு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 16 வகை பொருட்களில் 12 பொருட்களுக்கு ஏற்கனவே வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதர 4 பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணம் திரும்பக் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சீன வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts: