அபூபக்கர் அல் பக்டாடியின் சடலம் கடற் பகுதியில்.!

Wednesday, October 30th, 2019


ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தினரால் பக்டாடி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோபூர்வமாக அறிவித்திருந்தார்.

புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தினர் அவர் மறைந்திருந்த இடத்தில் தாக்குதல் நடத்திய நிலையில் குறித்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் உயிரிழந்ததாகவும், பின்னர் அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் வெள்ளைமாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்களை அமெரிக்க வெளியிடவேண்டும் என ரஷ்யா தொடர்ந்தும் கோரிவருகின்றது.

சுமார் 5 ஆண்டுகளாக சிரியா, ஈராக் பகுதிகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: