ஹோட்டலில் பாரிய வெடிப்பு சம்பவம்!
Friday, May 25th, 2018கனடாவின் Mississauga plaza பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் உள்ள Bambay Bhel என்ற இந்திய உணவகம் ஒன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள மூவரில் இருவர் டொறொன்டோ Sunnybrook வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறித்த வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வெள்ளை மாளிகையுடன் நாடாளுமன்ற இரு அவைகளும் குடியரசுக் கட்சியின் வசமானது!
துப்பாக்கி சூட்டு: அவுஸ்திரேலியாவில் 4 பேர் பலி!
உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் ஆளில்லா வான்வழித் தாக்குதல்!
|
|