ஹொங்கொங்கில் காவற்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் !

Saturday, June 22nd, 2019

ஹொங்கொங் காவற்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதிப்பரிமாற்ற சட்டமூலத்துக்கு எதிராக கடந்த வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் ஹொங்கொங்கில் வீதியில் இருந்து போராட்டங்களை நடத்தினர்.

இதனால் அந்த சட்டமூலம் அரசாங்கத்தினால் பிற்போடப்பட்டது.

தற்போது அந்த சட்டமூலத்தை முற்றாக ரத்து செய்யுமாறு கோரி, காவற்துறை தலைமையத்துக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு காவற்துறையினர் கோரியுள்ள போதும், தொடர்ந்தும் மக்கள் குவிந்து போராட்டத்தை நடத்துகின்றனர்.

சர்ச்சைக்குரிய இந்த சட்டமூலத்தின் மூலம், ஹொங்கொங்கில் கைது செய்யப்படுகின்றவர்கள் சீனாவிற்கு நாடுகடத்தப்பட முடியும்.

இதன்மூலம் சீனாவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் இலக்குவைக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சட்டமூலத்துக்கு மக்கள் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related posts: