ஹொங்கொங்கில் காவற்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்!

Monday, August 12th, 2019

ஹொங்கொங்கில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கைதிகள் பறிமாற்ற சட்ட மூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்த நாட்டில் சர்ச்சைக்குரிய கைதிகள் பறிமாற்ற சட்டமூலத்திற்கு எதிராக தொடர்ந்தும் 10 வாரமாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்ட நிலையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

வான் சய் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த நிலையில் தங்களது எதிர்ப்புக்களை வெளியிட்டு பேரணியாக சென்றனர்.

இதன்போது அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெற்றோல் குண்டுகளையும், கற்களையும் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து காவற்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தினர்.

இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.