ஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலா துறை அமைச்சர் பலி!

Thursday, February 28th, 2019

நேபாள சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட ஆறு பேர் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிக்கையிட்டுள்ளது.

குறித்த விபத்தில் சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட ஆறு பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.