ஹவாயிலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியது!

ஹவாய்த் தீவிலுள்ள கிலவ்வா எரிமலை வெடித்துள்ளதனைத் தொடர்ந்து அந்த பிரதேசத்தில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எரிமலையை அண்டியுள்ள பிரதேசத்தில் வசிக்கும் ஆயிரத்து 700 இற்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதிலிருந்து வெளிப்பட்ட பாரிய சாம்பல் துகள்கள் பிரதேசத்தில் உள்ள வீதிகளை மறைத்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் கந்தகம் மற்றும் எரிந்த விருச்சங்களின் மணம் தொடர்ந்தும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியேற்றப்பட்ட மக்கள் சனசமூக நிலையங்களில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு உதவும் நோக்கில் இராணுவம் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஹவாய் ஆளுனர் டேவிட் இக்தெரிவித்துள்ளார்.
Related posts:
சீனாவில் நிதி மோசடி இலட்சக்கணக்கானவர்கள் ஏமாற்றம்!
700 ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் சிலை!
இந்தோனேஷியாவில் சுனாமி: பலர் உயிரிழப்பு !
|
|