ஹம்சா பின்லேடனின் தலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் – அமெரிக்கா அறிவிப்பு!

Friday, March 1st, 2019

ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அல்-கய்தா அமைப்பின் முக்கிய தலைவராக ஒசாமா பின்லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் உருவாகிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தனது தந்தை கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென, சமீப ஆண்டுகளில் ஹம்சா காணொளி மற்றும் ஒலி வடிவச் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், சுமார் 30 வயதாகும் ஹம்சா பின்லேடன் 02 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவால் சர்வதேசத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: