ஹமாஸ் – இஸ்ரேல் யுத்தம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் காஸாவில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழப்பு!

Sunday, December 24th, 2023

ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள இஸ்ரேலின் தாக்குதல் தினமும் அதிகரித்து வருவதுடன் இராணுவம் மோசமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர், சிறுவர்கள் மற்றும் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதலில் கூட்டுக் குடும்பத்தில் வசித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னாள் பணியாளரான அல்-மக்ராபியின் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் காஸாவில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

நுசெரத் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளரான முஹமட் கலீஃபா என்பவரின் கூட்டுக் குடும்பமும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காஸாவின் சிவில் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: