ஹமாஸை ரஷ்ய தலைவர் புடின் ஆதரிக்கிறார் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றச்சாட்டு !
Friday, October 20th, 2023ஹமாஸை ரஷ்ய தலைவர் புடின் ஆதரிக்கிறார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து அமெரிக்கர்களும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காஸா எல்லையை அடிப்படையாக கொண்டு இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் தற்போது அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அமெரிக்க ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இவ்வாறு திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கு காரணம் ரஷ்ய தலைவரின் தலையீடே. எனவே, உலக அமைதியை நிலை நாட்ட அனைத்து அமெரிக்கர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேலுக்கும், ரஸ்சியாவுக்கு எதிராக உக்ரைனுக்கும் மேலும் அமெரிக்க இராணுவ உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க காங்கிரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|