ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளின் அபராதம் இரத்து – ஐரோப்பிய ஒன்றியம்!

Wednesday, August 10th, 2016

அதிகப்படியான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைகள் தொடர்பாக ஸ்பெயினுக்கும், போர்த்துக்கல்லுக்கும் அபராதங்களை இரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேலாக வரவு செலவு திட்டப் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றிய விதிமுறையை இந்த இரு நாடுகளும் மீறி இருக்கின்றன.

இந்த வரையறைக்கு படி அதனுடைய பற்றாக்குறைய கொண்டுவர இரண்டு ஆண்டுகள் ஸ்பெயினுக்கு வழங்கியிருக்கும் அதேவேளையில், மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் இரண்டரை சதவீதத்திற்குள் பற்றாக்குறையை கொண்டுவர போர்த்துக்கல்லுக்கு ஓராண்டு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் உணர்வுப்பூர்வமான கருத்துக்கள் அதிகரித்து வரும் வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற முடிவெடுத்துள்ள நிலையில் இந்த அபராத இரத்து அறிவிப்பு வந்துள்ளது

Related posts: