வேற்று நாட்டு படைகள் வெளியேறும் வரை அமைதி பேச்சுக்களில் பங்கேற்க தலிபான்கள் மறுப்பு!

Monday, March 7th, 2016
ஆப்கானிஸ்தானில் உள்ள சர்வதேச படைகள் , தாலிபான் நிலைகளின் மீது நடத்தும் தாக்குதல்களை நிறுத்தி, நாட்டைவிட்டு வெளியேறும்வரை ஆப்கன் அரசாங்கத்துடனான அமைதிப் பேச்சுக்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தாலிபான் தெரிவித்துள்ளது.
அமைதிக்கான நடவடிக்கையின் முதல்படியாக ஆப்கன் அரசாங்கத்தின் செலவில் பாகிஸ்தானில் அடுத்தவாரம் நடைபெறவிருந்த அமைதி பேச்சுக்களில் தாலிபான்கள் பங்கேற்பார்கள் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் தாலிபான்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டப்போதிலும், அமெரிக்க படைகள் தமது நிலைகள் மீதான வான் தாக்குதல்களை அதிகரித்திருப்பதாக தாலிபான் தெரிவித்துள்ளது. அந்த இலக்குகளை ஆப்கானிஸ்தானின் அரசாங்க படைகளும் தாக்கியதாகவும் தாலிபான் தெரிவித்துள்ளது.

Related posts: