வேடிக்கை பார்த்த சிறுமியை  நீருக்குள் இழுத்த கடல் சிங்கம்!

Monday, May 22nd, 2017

கனடாவின் ரிச்மாண்ட் நகரில்  மீன்பிடி துறைமுகத்தில் நீரில் நீந்தி கொண்டிருந்த  கடல்  சிங்கத்துக்கு உணவுகளை சிலர் போட்டுக்கொண்டிருந்த போது திடீரென துறைமுக விளிம்பில் அமர்ந்திருந்த ஒரு சிறுமியின் பின்புறம் ஆடையை பிடித்து கடல் சிங்கம் நீருக்குள் இழுத்தது.

இதையடுத்து அருகிலிருந்த ஒரு நபர் உடனடியாக நீருக்குள் குதித்து சிறுமியை காப்பாற்றினார்.இந்த சம்பவத்தில் சிறுமிக்கு காயம் ஏற்படவில்லை.இதை அங்கிருந்த ஒருவர் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இது குறித்து கனடா கடல் பாலூட்டி ஆராய்ச்சி பிரிவின் தலைவர் ஆண்ட்ரு டிரிட்டஸ் தெரிவிக்கையில்: வீடியோவை நான் பார்த்தேன். அதில் கடல் சிங்கம் மேல் எந்த தவறுமில்லை. அதை சுற்றி நின்றிருந்தவர்கள் செய்த தவறால் தான் இது நடந்துள்ளது. அந்த கடல் சிங்கத்துக்கு அங்கிருந்தவர்கள் உணவு அளித்துள்ளார்கள். இதையடுத்து அந்த சிறுமியின் உடையை கண்ட அந்த கடல் சிங்கம் அதை உணவு என நினைத்து உள்ளே இழுத்துள்ளது என்று தெரிவித்தார்

Related posts: